Home செய்திகள் ஒலுவில் கடற்படைத் தளத்தில் தங்கவைக்கப்பட்ட 28 பேரில் ஐவருக்கு கொரோனா!

ஒலுவில் கடற்படைத் தளத்தில் தங்கவைக்கப்பட்ட 28 பேரில் ஐவருக்கு கொரோனா!

68
0

ஜா-எல பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டு ஒலுவில் கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த 28 பேரில் ஐவருக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 5 நோயாளர்களையும் புத்தளம் – இரணவிலவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

புத்தளம் – இரணவில பகுதியில் உள்ள Voice of America கட்டிடத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு செல்லும் முதல் நோயாளர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.