Home தாயக செய்திகள் 210 ஆக உயர்வடைந்தது கொரோனா நோயாளர் எண்ணிக்கை!

210 ஆக உயர்வடைந்தது கொரோனா நோயாளர் எண்ணிக்கை!

68
0

இலங்கையில் மேலும் 12 பேருக்கு COVID-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொரோனா நோயாளர் எண்ணிக்கை 210 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் மார்ச் 28 ஆம் திகதி முதலாவது கொரோனா நோயாளர் இறந்ததை அடுத்து இன்று (12-04-2020) இரவு 8:00 மணிவரை இன் நோயினால் 7 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஆனால் இதுவரை சரியான பரிசோதனை நாடு பூராகவும் நடைபெறவில்லை என்பதும். போதிய சுகாதார வசதிகள் இன்றி சுகாதாரப்பணியாளர்கள் பணியாற்றிவருவதும் இனி வரும் வாரங்களில் மேலும் பல புதிய கொரோனா நோயாளர்களை கொண்டுவரும் அபாய நிலை காணப்படுகிறது.

இத் தருணத்தில் மக்கள் விளிப்போடும், சூழ்நிலையை புரிந்து கொண்டு சரியான நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே அதிக இழப்புக்களை தவிர்க்க முடியும்.

அயல் நாடான இந்தியாவில் இன்று மட்டும் 37 மரணங்கள் நிகழ்ந்ததை அடுத்து அங்கு கொரோனா நோயால் இறந்தவர்கள் எண்ணிக்கை 325 ஆக உயவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.