Home உலக செய்திகள் லண்டனில் இன்னுமோர் தமிழர் கொரோனாவிற்கு பலி!

லண்டனில் இன்னுமோர் தமிழர் கொரோனாவிற்கு பலி!

113
0

லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமோர் தமிழர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளார்.

யாழ், வலிகாமம் வடக்கு – மயிலிட்டியை (வேல்வீதி ) பிறப்பிடமாகக் கொண்ட 34 வயதுடைய அழகரத்தினம் ஜீவிதன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

தாயகத்தில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக 5 வயதிலேயே சொந்த ஊரை விட்டு வெளியேறி யாழ்-பருத்தித்துறையில் குடும்பத்தினருடன் வசித்துவந்த இவர் யாழ், ஹாட்லிக் கல்லூரியின் (உயர்தரம் 2005) கணிதப்பிரிவு மாணவனுமாவார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டு லண்டனில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ள போதும், கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக நேற்று (11-04-2020) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

லண்டனுக்கு அகதி தஞ்சம் கோரி சென்ற இவர் பத்து ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது அவரது அகதிக் கோரிக்கை ஏற்கப்பட சாதகமாக இருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.