Home உலக செய்திகள் பிரிட்டனில் மேலும் 2 தமிழர் மரணம் – 24 மணித்தியாலங்களில் 917 பேர் சாவு!

பிரிட்டனில் மேலும் 2 தமிழர் மரணம் – 24 மணித்தியாலங்களில் 917 பேர் சாவு!

173
0

பிரிட்டனில் கடந்த சில தினங்களாக அதிகளவான உயிரிழப்புக்கள் ஏற்ற்பட்டு வரும் நிலையில் மரணிப்போர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை அண்மித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 917 பேர் சாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இறந்தவர்களில் யாழ் மாவட்டம் வடமராட்சியை சொந்த இடமாகக் கொண்ட இருவரும் உள்ளடங்குகின்றனர்.

வடமராட்சி இம்பிலிட்டியை சேர்ந்தவரும், லண்டன் ரூட்டிங் பகுதியில் வசித்துவந்தவருமான வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரும், வடமராட்சி வல்வெட்டித்துறையை சேர்ந்தவரும், தென்மேற்கு லண்டன் பகுதியில் வசித்துவந்தவருமான TAXI ஓட்டுனர் ஒருவருமே இவ்வாறு இறந்தவர்களாவர்.

இவர்களின் மரணத்துடன் சேர்த்து இதுவரை கொரோனா நோயினால் பிரித்தானியாவில் மட்டும் 13 தமிழர்கள் உட்பட 17 இலங்கையர்கள் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்று வெளியான தகவலின் அடிப்படையில் 74,695 பேர் பிரித்தானியாவில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 9,875 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.