Home உலக செய்திகள் அமெரிக்காவில் 5 இலட்சத்தை தாண்டியது – 20 ஆயிரத்தை நெருங்கும் மரணங்கள்!

அமெரிக்காவில் 5 இலட்சத்தை தாண்டியது – 20 ஆயிரத்தை நெருங்கும் மரணங்கள்!

390
0

உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருந்த அமெரிக்கா இப்போது COVID-19 வைரஸ் தாக்கத்தின் பின் கொரோனா ணோயினால் ஆட்டம் கண்டுள்ளது.

நாளாந்தம் இறப்பவர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியும், புதிய நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை பல ஆயிரங்களாகவும் அதிகரித்த வண்ணமே செல்வது அமெரிக்காவின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

நேற்றைய தினம் (10-04-2020) மட்டும் 2035 பேர் அமெரிக்காவில் கொரோனா நோயினால் மரணமடைந்துள்ளனர். இதுவரை கோரோனா நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவே தற்போது முதலிடத்தில் உள்ளது. இன்றைய விபரங்கள் வெளிவரும் போது அமெரிக்காவில் மரணமானோர் தொகை 20 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி கோரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் ஐந்து இலட்சத்தை தாண்டி (503,177) ஏனைய நாடுகளை விட பல இலட்சம் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது.

இந்த நிலமை இப்படியே சென்றால் அமெரிக்கா எதிர்காலத்தில் பாரிய பின்னடைவை சந்திக்கும் என்பதோடு, பொருளாதாரத்திலும், உலக தரத்திலும் மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

அத்தோடு இக் கொரோனா தாக்கம் உலகெங்கும் இருந்து நீங்க இன்னும் சில மாதங்கள் செல்லும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னர் உலகில் பல மாற்றங்கள் இடம்பெறவும், பொருளாதாரத் தடைகள், சுரண்டல்கள், யுத்தங்கள் என்பன ஏற்படலாம் என்றும் நம்பப்படுகிறது.