Home உலக செய்திகள் 1.6 மில்லியனை தாண்டிய கொரோனா நோயாளர் – சில நாடுகளில், நாள் ஒன்றிற்கு 1000 ஐ...

1.6 மில்லியனை தாண்டிய கொரோனா நோயாளர் – சில நாடுகளில், நாள் ஒன்றிற்கு 1000 ஐ தாண்டிய மரணங்கள்!

383
0

10-04-2020 இன்று பிரித்தானிய நேரம் மதியம் 12:00 மணிவரை வெளியான கொரோனா நோய்த்தாக்கமும், இழப்பும் தொடர்பான புள்ளிவிபரத்தின் படி 96,791 பேர் மரணமடைந்துள்ளனர். இன்றைய இறப்பு வீதம் சில நாடுகளின் விபரங்கள் மட்டுமே வெளியான நிலையில் வெளிவந்துள்ள இந்த அறிக்கையின் படி இன்று மாலைக்குள் இது ஒரு இலட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

COVID-19 வைரஸ் தாக்கத்தினால் உருவாகும் CORONA நோயிற்கு உலகளவில் இதுவரை 1,615,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத் தகவலின் அடிப்படையில் அதிகூடிய மரணங்கள் இடம்பெற்ற நாடுகளாக முறையே இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் இருக்கின்றன.

29-03-2020 இன்று காலை பிரித்தானிய நேரம் மதியம் 12:00 மணிவரையான தகவலின் அடிப்படையில் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளின் கொரோனா விபரம்:

  • ஐக்கிய அமெரிக்கா – 16,937ர் பலி, 468,895 பேர் பாதிப்பு
  • ஸ்பெயின் – 15,843 பேர் பலி, 157,022 பேர் பாதிப்பு
  • இத்தாலி – 18,279 பேர் பலி, 143,626 பேர் பாதிப்பு
  • பிரான்ஸ் – 12,210 பேர் பலி, 117,749 பேர் பாதிப்பு
  • ஜேர்மனி – 2,607 பேர் பலி, 118,235 பேர் பாதிப்பு
  • பிரித்தானியா – 7,078 பேர் பலி, 65,077 பேர் பாதிப்பு
  • சுவிட்ஸர்லாந்து 958 பேர் பலி, 24,172 பேர் பாதிப்பு
  • பெல்ஜியம் – 3,019 பேர் பலி, 26,667 பேர் பாதிப்பு
  • நெதர்லாந்து – 2,396 பேர் பலி, 21,762 பேர் பாதிப்பு
  • நோர்வே – 108 பேர் பலி, 6,219 பேர் பாதிப்பு
  • அவுஸ்திரேலியா – 53 பேர் பலி, 6,203 பேர் பாதிப்பு
  • இலங்கை – 7 பேர் பலி, 191 பேர் பாதிப்பு
  • இந்தியா – 228 பேர் பலி, 6,771 பேர் பாதிப்பு
  • சிங்கப்பூர் – 6 பேர் பலி 1,910 பேர் பாதிப்பு
  • மலேசியா – 70 பேர் பலி, 4,346 பேர் பாதிப்பு
  • கனடா – 509 பேர் பலி, 20,765 பேர் பாதிப்பு
  • டென்மார்க் – 237 பேர் பலி, 5,635 பேர் பாதிப்பு
  • நியூசிலாந்து – 2 பேர் பலி, 1,283 பேர் பாதிப்பு