Home செய்திகள் அனைத்து அரிசி ஆலைகளின் செயற்பாடுகளும் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு:

அனைத்து அரிசி ஆலைகளின் செயற்பாடுகளும் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு:

47
0

நாட்டில் உள்ள அனைத்து அரிசி ஆலைகளின் செயற்பாடுகளும் அத்தியாவசிய சேவையாக இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழல் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என யாராலும் எதிர்வு கூற முடியாதுள்ள சூழலிலேயே, உணவுப் பஞ்சம் ஏற்படாதிருப்பதை தடுக்கும் முகமாகவும், தொடர்ந்தும் அரிசி விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.