
ஈழத் தமிழ் ஊடகவியலாளரான தி. ஆனந்தவர்ணன் (ஆனந்தன்) இன்று (09-04-2020) வியாழக்கிழமை காலை லண்டனில் காலமானார்.
பல்லாயிரக் கணக்கில் உலகெங்கும் மனித உயிர்களை காவு கொண்டுவரும் “கொரோனா நோயிற்கு” பலியான முதலாவது ஈழத் தமிழ் ஊடகவியலாளர் இவர் ஆவார்.
முன்னாள் பூநகரி கோட்டக் கல்விப் பணிப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான தில்லைநாதனின் மகன் இவர் ஆவார்.
TTN தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராகவும், நிகழ்ச்சி (தாயகப் பார்வை) தொகுப்பாளராகவும் பணியாற்றிய இவர் பலராலும் அறியப்பட்ட ஒரு ஆளுமை உள்ள ஊடகவியலாளன்.
அச்சுறுத்தல்கள், சரியான ஊதியமற்ற கடும் பணி, பல வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் ஊடகத்திற்கான அர்ப்பணிப்பு என பல சவால்களுக்கு மத்தியில் எதிர் நீச்சல் போடும் தமிழ் ஊடகர் வாழ்க்கையில், இவரை இன்று இழந்திருப்பது தமிழ் ஊடகத் துறைக்கு பேரிழப்பாகும்.
இந்த துயர வேளையில், அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை “தமிழ் நாதம் ஊடக குழுமம்” தெரிவித்து கொள்கிறது.