Home உலக செய்திகள் 14 இலங்கையர்கள் பிரிட்டனில் மரணம் – 24 மணித்தியாலங்களில் 938 பேர் மரணம்!

14 இலங்கையர்கள் பிரிட்டனில் மரணம் – 24 மணித்தியாலங்களில் 938 பேர் மரணம்!

292
0

இலங்கைச் சேர்ந்த 14 பேர் பிரிட்டனில் கொரோனா நோயினால் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

இவ்வாறு இறந்தவர்களில் ஓய்வின் பின்னரும் கடமை உணர்வோடு வைத்திய சாலையில் “கொரோனா நோயாளர்களுக்கான சிகிச்சை வழங்கி வந்த வைத்தியர் அன்ரன் செபஸ்ரியான்பிள்ளை உட்பட 10 தமிழர்களும் 4 சிங்களவர்களும் அடங்குவர்.

இன்று (08-04-2020) புதன் கிழமை வெளியான உத்தியோக பூர்வ தகவலின்படி பிரித்தானியாவில், கொரோனா நோயினால் கடந்த 24 மணித்தியாலங்களில் 938 பேர் இறந்துள்ளதை அடுத்து மரணமானோர் எண்ணிக்கை 7,097 ஆக உயர்வடைந்துள்ளது. அத்தோடு COVID-19 வைரஸ் தொற்றிற்குள்ளாகி CORONA நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,733 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

கொரோனா நோயினால் இறந்த இலங்கையர்களில் 73 வயது தமிழ் பெண் ஒருவரும் ஏனைய அனைவரும் 38 வயதிற்கும் 80 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இறந்தவர்களில் இரு மரணங்கள் அவசர காவுவண்டி வர ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதால் நிகழ்ந்ததாகவும், ஒருவரின் மரணம் தானாகவே பதட்டத்தோடு, விரக்தியோடும் தனக்கு கொரோனா நோய், தான் வீட்டிற்கு வரமாட்டேன். கடையிலேயே தங்குகிறேன் என கூறிவிட்டு கடைக்குள் தங்கியிருன்த வேளை அவரின் மர விரக்தியும், அதிக பயமும் அவரை மூச்சுத் திணரலுக்குள் உள்ளாக்கி இறந்ததாகவும், மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் மேற்படி 14 பேருக்கும் “கொரோனா நோய்” என்றே மரண சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இக் கொடிய நோயினால் இறந்தவர்களில், வைத்தியர், பொறியியலாளர், வருமான வரி அதிகாரி, மற்றும் கடை உரிமையாளர்கள் இருவரும் உள்ளடங்குவர்.

நேற்றைய (07-04-2020) தினம் மட்டும் பிரித்தானியாவில் 786 பேர் கொரோனா நோயினால் மரணமடைந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.