Home செய்திகள் மேலும் ஒருவர் மரணம் -கொரோனா நோயாளர் எண்ணிக்கை 180 ஆக அதிகரிப்பு!

மேலும் ஒருவர் மரணம் -கொரோனா நோயாளர் எண்ணிக்கை 180 ஆக அதிகரிப்பு!

156
0

இலங்கையில் கொரோனாத் நோயாளர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கொரோனா நோயினால் இலங்கையில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 38 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வேளை, இன்று (07/04) இரவு 7:45 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாட்டில் நிலவும் கொரோனா நோய்த்தொற்று தொடர்பான விசேட உரை ஆற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.