Home உலக செய்திகள் பிரிட்டன் பிரதமரின் உடல் நிலை மேலும் பாதிப்பு – தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

பிரிட்டன் பிரதமரின் உடல் நிலை மேலும் பாதிப்பு – தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

82
0

லண்டன் சென். தோமஸ் வைத்தியசாலையில் அனௌமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோண்சன் உடல் நிலை மோசமடைந்துள்ளதனை அடுத்து, அவரது மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில்,

பிரதமர் தீவிர சிகிச்சை பிரிவில் சிறந்த கவனிப்புக்கு உட்பட்டுள்ளார். அதே வேளை, தற்போதைய அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, தனக்கு பதிலாக நாட்டின் முதன்மைச் செயலாளராக இருக்கும் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் (Foreign Secretary Dominic Raab), கடமைகளை மேற்கொள்வார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.”

அத்துடன் அனைத்து தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றிகளையும் அவர் தெரிவித்துள்ளார் என்றார்.