Home செய்திகள் கொரோனா நோயினால் இன்னுமோர் தமிழர் லண்டனில் மரணம்!

கொரோனா நோயினால் இன்னுமோர் தமிழர் லண்டனில் மரணம்!

58
0

யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வீரவாகுப்பிள்ளை குகன் கொரோனா வைரஸ் நோய் காரணமாக லண்டனில் நேற்று 6-4-20 திங்களன்று உயிரிழந்துள்ளார்.

லண்டன் மிச்சம் பகுதியில் தமது குடும்பத்துடன் வசித்து வந்த 55 வயதுடைய குகன் வீரவாகுப்பிள்ளை கடந்த 28-ம் திகதி முதல் லண்டன் Tooting St. Georges மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி மரணத்தைத தழுவிக் கொண்டார்.

3 பிள்ளைகளின் தந்தையான இவர், பிரான்ஸ் – பாரிஸ் நகரில் 25 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்தவர். பின் குடும்பத்தோடு பிரித்தானியா சென்ற இவர் லண்டனில் 5 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

வாடகைக் கார் சாரதியாகப் பணியாற்றிய வேளையிலேயே கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

லண்டனில் வாடகைக் கார் சாரதியாகப் பணியாற்றிய யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மற்றும் ஒருவரும் கொரோனா வைரஸ் நோய் காரணமாக உயிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்;.