Home உலக செய்திகள் “கொரோனா” நோயாளர்களை காக்க உதவும் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இணங்கியது இந்தியா!

“கொரோனா” நோயாளர்களை காக்க உதவும் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இணங்கியது இந்தியா!

94
0

கொரோனா நோயினால் உலகமே பதிக்கப்பட்டு, கொத்துக் கொத்தாக மரணங்கள் நாள்தோறும் இடம்பெற்று வரும் நிலையிலும், அதை ஓரளவுகு தடுக்கக் கூடிய மருந்து கைவசம் இருந்தும் ஏற்றுமதிக்கு திடீர் தடை விதித்திருந்த இந்தியா அமெரிக்காவின் கடும் எச்சரிக்கைக்கு பணிந்து தற்போது அனுமதி அளித்துள்ளது.

Hydroxychloroquine எனப்படும் மாத்திரையையே ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்த இந்தியா தற்போது இந்தியா மீதான பொருளாதாரத் தடை அச்சத்திலும், எதிர் காலத்தில் முக்கிய உலக நாடுகளை பகைத்துக்கொள்ள நேறிடும் என்பதாலும் தற்போது தடையில் தளர்வு செய்துள்ளது.

இது தொடர்பாக நேற்று முந்தினம் அமெரிக்க ஜனாதிபதி ட்றம் பேசுகையில், கொரோனா நோயாளர்களை காக்கக்கூடிய hydroxychloroquine மாத்திரைகள் இந்தியாவில் இருக்கின்றது. நாம் ஒரு கொகுதி மாத்திரைகளுக்கு ஓடர் கொடுத்தோம். ஆனால் இதுவரை வரவில்லை. ஏற்றுமதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிந்து இந்திய பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் இதுவரை வரவில்லை.

அனுப்பிவைத்தால் பாராட்டிற்குரியது. இல்லையேல் நாங்களும் தடைகளை போடுவோம். ஏன் போடக்கூடாதா..? என்று மிரட்டல் விட்டதை அடுத்தே இந்தியா தற்போது பணிந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.