Home உலக செய்திகள் உயிர் காக்கும் பணியில் பிரிட்டனில் பணியாற்றிய தமிழ் வைத்தியர் மரணம்!

உயிர் காக்கும் பணியில் பிரிட்டனில் பணியாற்றிய தமிழ் வைத்தியர் மரணம்!

249
0

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக தள்ளாத வயதிலும் மீண்டும் சேவையில் ஈடுபட்டு கொரோனா நோயாளர்களை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தமிழ் வைத்தியர் ஒருவர் COVID-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.

கிங்ஸ்டன் வைத்தியசாலையில் மருத்துவ ஆலோசகராக பணியாற்றி வைத்திய துறையிலிருந்து ஓய்வு பெற்று சமூக சேவையாளராக செயற்பட்ட 74 வயதுடைய அன்ரன் செபஸ்டியன் (திலகன்) என்ற மருத்துவரே உயிரிழந்தவர் ஆவார்.

தனது வயதினையும் கருத்திற் கொள்ளாது தான் படித்த படிப்பின் பெறுமதியையும், தனது சேவையின் முக்கியத்துவ்அத்தையும் உணர்ந்து மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளமை இலங்கை தமிழர்களை மட்டுமன்றி பிரித்தானிய சுகாதாரத்துறையினரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பினை (1967) நிறைவு செய்துள்ளார். இவர் ஒரு எழுத்தாளரும் ஆவார். மருத்துவம், வரலாறு சார்ந்த சில புத்தகங்களை எழுதியுள்ளார்.

பிரித்தானியாவில் நேற்று மாலை வரை 5,373 பேர் கொரோனா நோயினால் மரணமடைந்திருப்பதுடன், 51,608 பேர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.