Home செய்திகள் வடமாகாண “கொரோனா நோய்” பரிசோதனை நிலையமாக யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம்!

வடமாகாண “கொரோனா நோய்” பரிசோதனை நிலையமாக யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம்!

41
0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனையை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளந எனவும், நேற்றைய (04/04) தினத்திலிருந்து மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறுவதாகவும் மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தெரிவித்தார்.

யாழ் – போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்விடையம் குறித்து அவர் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கான கொரோனா தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் இதுவரை காலமும் அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டே சோதனைகள் இடம்பெற்றன.

சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆகியோரின் தீவிர முயற்சியிலேயே தற்போது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கொரோனா சந்தேகத்துக்குரிய நோயாளர்கள் தங்கள் மருத்துவ பரிசோதனையை இலகுவாக இங்கேயே செய்யக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மிகவும் நுணுக்கமான முறையில் பாதுகாப்பான முறையிலும் இந்தப் பரிசோதனைகள் இடம்பெறுவதோடு, மருத்துவ அறிக்கையை சுமார் மூன்று மணி நேரத்துக்குள் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

எனவே பல்கலைக்கழகத்தின் ஏனைய ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் கூறினார்.