Home செய்திகள் பொதுச் சுகாதார பரிசோதகர் மீது கத்திக் குத்துத் தாக்குதல்!

பொதுச் சுகாதார பரிசோதகர் மீது கத்திக் குத்துத் தாக்குதல்!

65
0

ரம்புக்கணை, பத்தம்பிட்டிய பிரதேசத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் கத்திக் குத்தில் காயமடைந்துள்ளார்.

கொரோனா நோ தொற்றை தடுக்கும் முகமாக மேற்கொண்ட அவரது பணிக்கு இடையூறு விளைவித்துள்ள 15 வயதுடைய சிறுவன், அவரை கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பொது சுகாதார அதிகாரி ரம்புக்கணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த கத்திக் குத்தை மேற்கொண்ட சிறுவன் தப்பியோடி தற்போது அப்பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியுள்ளதாக கிடைக்கப் பெற்றுள்ள தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுக்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும், சந்தேகநபருக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.