Home செய்திகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் முலுக்கு வருகிறது ஊரடங்குச் சட்டம்!

நாளை முதல் மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் முலுக்கு வருகிறது ஊரடங்குச் சட்டம்!

210
0

இலங்கையில், மேலும் இருவர் Covid-19 வைரஸ் தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொரோனா நோயாளர் எண்ணிக்கை 167 ஆக உயர்வடைந்துள்ளது.

உலகெங்கும் ஏபரல் முதல் இரு வாரங்களில் நோய்த் தொற்று பரவலும், உயிரிழப்புக்களும் அதிகமாக காணப்படும் என்ற உலக சுகாதார அமைப்பின் எச்சரிகையை தொடர்ந்து நாளை முதல் நாடு முழுவதும் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், கண்டி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் எனவும்,

ஏனைய மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தளர்ந்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டு மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.