
இம் மாதம் இந்தியாவில் COVID-19 வைரஸ் தாக்கத்திற்கு சுமார் 75,000 பேர் பாதிக்கப்படுவ்அர் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 3,072 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 525 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.