Home செய்திகள் யாழில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா தொற்று – 5வது நபர் இன்று காலை மரணம்!

யாழில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா தொற்று – 5வது நபர் இன்று காலை மரணம்!

228
0

யாழ்ப்பாணm – அரியாலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பலாலி பகுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த – அரியாலையில், போதகரின் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர்களில் 10 பேரின் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்ட போதே, அவர்களில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது அவர்களுடைய உடல்நிலை சாதாரணமாகவே காணப்படுகின்ற போதிலும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமையால் மேலதிக சிகிச்சை அளிக்கும் முகமாக அம்புலன்ஸ் மூலம் வெலிகந்த விசேட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை 159 பேர் COVID-19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதும், அதில் 7 பேர் யாழ் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.