Home செய்திகள் முல்லைத்தீவில், அயலவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞ்ஞன்!

முல்லைத்தீவில், அயலவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞ்ஞன்!

108
0

முல்லைத்தீவு – குமுழமுனையில் அயலவர்கள் ஒன்றுகூடி அடித்ததில் இளைஞன் ஒருவன் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் 26 வயதுடைய இராசலிங்கம் ரமேஸ் என்பவரே இறந்தவர் ஆவார்.

தனது வீட்டிற்குள் உள் நுழைந்து திருடிய அயலவர் வீட்டு நாயை குறித்த இளைஞ்ஞன் பிடித்து கட்டி வைத்துள்ளார். அதனை அவிட்டு விடுமாறு அயலவர்கள் கேட்க அதற்கு குறித்த இளைஞன் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற அயலவர்கள் இளைஞனை தாக்கியதில் மண்டை உடைந்து குறித்த இளைஞன் நேற்று முந்தினம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (03/04) இரவு குறித்த இளைஞன் மரணமடைந்ததை தொடர்ந்து இளைஞன் மீது தாக்குதல் நடாத்திய அயலவர்கள் 12 பேரை கொலைக்குற்ற வழக்கில் கைது செய்துள்ளனர்.