Home உலக செய்திகள் பிரான்ஸில், ஒரே நாளில் 1120 பேர் கொரோனா நோயினால் மரணம்!

பிரான்ஸில், ஒரே நாளில் 1120 பேர் கொரோனா நோயினால் மரணம்!

129
0

பிராண்ஸ் நாட்டில் தொடர்ச்சியாக கொரோனா நோயினால் ஆயிரக்கணக்கில் மக்கள் தினமும் இறந்து வரும் நிலையில், நேற்றைய தினம் மட்டும் 1120 பேர் இறந்துள்ளமை பிரான்ஸ் நாட்டையே அச்சத்தில் உறையவைத்துள்ளது.

இதுவரை வெளியான புள்ளிவிபரங்களின் படி ஒரே நாளில் கொரோனா நோயினால் 1000 க்கும் மேற்பட்டோர் இறந்தமை நேற்றைய தினமே பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் மட்டும் அமெரிக்காவில் 1321 பேரும், பிரான்ஸில் 1120 பேரும், ஸ்பெயினில் 850 பேரும், இத்தானிலியில் 766 பேரும், பிரித்தானியாவில் 684 பேரும் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு பிரான்ஸில் காவல்துறை (POLICE) உத்தியோகஸ்தர் ஒருவரும் நேற்றைய தினம் (03/04) உயிரிழந்துள்ளதாக பிரான்ஸின் தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று (03/04) இரவு வரையான உத்தியோகபூர்வ தகவலில் படி பிரான்ஸில் இதுவரை கொரோனா நோயினால் 6,507 பேர் பலியாகியுள்ளதுடன், 82,165 பேர் நோய்த் தொற்றிற்கு உள்ளானவர்களாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேலை, பிரான்ஸ் நாட்டிலேயே தமிழர்களும் அதிகளவில் இறந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.