Home உலக செய்திகள் 9 நாட்களில் தயாரான 4000 நோயாளர்களை பராமரிக்கும் மருத்துவமனை – இளவரசர் சாள்ஸ் திறந்துவைப்பு!

9 நாட்களில் தயாரான 4000 நோயாளர்களை பராமரிக்கும் மருத்துவமனை – இளவரசர் சாள்ஸ் திறந்துவைப்பு!

203
0

கொரோனா நோயாளர் எண்ணிக்கை உலகளவில் 10 இலட்சத்தி 34 ஆயிரத்தை தாண்டிவிட்ட நிலையில், பிரித்தானியாவில் அவசரகால தற்காலிக மருத்துவமனை ஒன்று இன்று திறந்துவைக்கப்பட்டது.

கடந்த ஒன்பது (9) நாட்களில் 4000 நோயாளர்களை பராமரிக்கும் வசதிகளுடன் லண்டனில் பிரபல்யமான மண்டபமான ExCel மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள “நைட்டிங்கேள்” மருத்துவமனையை பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் ஸோட்லாந்தில் இருந்தவாறே காணொளி பரிவர்த்தனை ஊடாக திறந்துவைத்தார்.

நாளொன்றிற்கு 200 இராணூவத்தினர் இவ் வேலைத்திட்டத்தில் கட்டிட நிர்மாணப்பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இளவரசர் மருத்துவமனையை திறந்து வைத்து உரையாற்றுகையில், தான் முதலில் இப்படியான ஒரு திட்டத்தையும், வடிவமைப்பையும் முன்மொழிந்தவர்களுக்கு நன்றியை தெரிவிப்பதாகவும், இவ் உயரிய பணியில் செயற்பட்ட கட்டிட பணியாளர்கள் மற்றும் படைவீரர்களுக்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறினார்.