Home செய்திகள் பட்டதாரி பயிலுனர்களை பணிக்கு அமர்த்துவது சட்டவிரோதமானது: தேர்தல்கள் ஆணைக்குழு

பட்டதாரி பயிலுனர்களை பணிக்கு அமர்த்துவது சட்டவிரோதமானது: தேர்தல்கள் ஆணைக்குழு

90
0

பட்டதாரிப் பயிலுனர்களை பணிக்கு அமர்த்துவது தேர்தல் சட்டத்துக்கு விரோதமானது. இதனை நிறுத்துமாறு இம்மாதம் 3 ஆம் திகதியே கடிதம் அனுப்பி இருந்தோம். இதன் பின்னரும் அப்படி முயற்சிப்பதானது தேர்தல் சட்ட மீறலாகவே கருதப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆள் பற்றாக்குறை எழுந்துள்ளது என்றால் பட்டதாரிப் பயிலுனர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள் எனவும் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.