Home செய்திகள் இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் – 2000 நோயாளர்களை பராமரிக்க ஏற்பாடுகள் பூர்த்தி!

இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் – 2000 நோயாளர்களை பராமரிக்க ஏற்பாடுகள் பூர்த்தி!

74
0

இலங்கையில், அடுத்து வரும் வாரங்களில் ஏற்படப் போகும் நிலைமையை கருத்திற் கொண்டு 2000 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி அளவில் நோயாளிகளின் எண்ணிக்கை 350 ஐ தாண்டும் எனவும், தற்போதைய நோய் பரவலை கணக்கிட்டு இந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளை விடவும் ஆரம்ப 20 நாட்களில் இலங்கையில் தீவிரமாக வைரஸ் பரவியிருக்கின்றது. எனினும், தற்போது அமெரிக்காவின் நிலைமை படுமோசமாகி விட்டது. அமெரிக்காவில் ஆரம்ப 20 நாட்களில் 20 பேரே கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்தனர்.பிரித்தானியாவில் 9 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். எனினும், இலங்கையில் கடந்த 20 நாட்களில் 150 பேர் இனங்காணப்பட்டிருப்பதாக அமெரிக்கப் ஜோன்ஸ் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா நோயை எதிர்கொள்ளவென உலக வங்கி இலங்கைக்கு 1.28 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.