Home செய்திகள் பம்பைமடு முகாமிலிருந்து 45 பேர் இன்று விடுவிப்பு!

பம்பைமடு முகாமிலிருந்து 45 பேர் இன்று விடுவிப்பு!

81
0

வவுனியா – பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் வைரஸ் தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மக்களில் 45 பேர் இன்று வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட 2,121 பேர் இதுவரை தமது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 1,500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் 32 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.