Home செய்திகள் தமது பாதுகாப்பு குறித்து கவனத்திற் கொள்ளாத அரசை கண்டித்து பணிப் புறக்கணிப்பிற்கு தயாராகும் சுகாதாரப் பணியாளர்கள்:

தமது பாதுகாப்பு குறித்து கவனத்திற் கொள்ளாத அரசை கண்டித்து பணிப் புறக்கணிப்பிற்கு தயாராகும் சுகாதாரப் பணியாளர்கள்:

74
0

நாட்டில் முன்னெடுக்கப்படும் கொரோனா கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் இருந்து விலகியிருப்பதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பொது சுகாதார சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுகாதார அமைச்சுக்கு இந்த முடிவை அறிவித்துள்ளார்.

தமது குடும்பத்தினரின் உயிரினை பணயம் வைத்து தாம் கடமையினை செய்த போதும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தமது பாதுகாப்பு குறித்து கவனத்திற் கொள்ளவில்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும் போக்குவரத்து மற்றும் உணவு போன்ற அடிப்படை வசதிகள் கூட தமக்கு வழங்கப்படவில்லை என பொது பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்துகின்றது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இன்று (02) முதல் தமது கடமைகளில் இருந்து விலகியிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.