Home செய்திகள் பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் லண்டனில் மரணம்!

பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் லண்டனில் மரணம்!

190
0

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியும், மாவீரருமான பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் திருமதி. பாலகுரு காளீஸ்வரி அவர்கள் நேற்று லண்டனில் காலமானார்.

தாயகத்தில் வவினியாவை சொந்த ஊராகவும், புலம் பெயர்ந்து பிரித்தானியத் தலைநகர் லண்டனின் லூசியம் பகுதியில் வசித்துவந்த அவர் நேற்று முந்தினம் மாலை சுகஜீனம் காரணமாக லூசியம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவருக்கு சளி அதிகமாக இருப்பதாகவும், அதிகூடிய காச்சல் இருப்பதாகவும் கூறி தீவிர சிகிச்சை அறையில் அனுமதித்த்து சிகிச்சை அளித்தனர்.

இருப்பிநும் நேற்று மதியம் அவர் “நிமோனியா” நோயினால் இறந்துவிட்டதாக வைத்திய சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போரில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை அர்ப்பணித்த ஒரு மூத்த தளபதியின் தாயாரும், தேசியத் தலைவரை மிகவும் நேசித்தவரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அக்கறையும், பற்றும் வைத்து செயலாற்றிவந்த அந்த தாயாரின் இறுதி நிகழ்வில் கூட மக்கள் கலந்துகொள்ள முடியாத சூழலில் தமிழினமே தவித்து விம்மி அழுகின்றது.