Home உலக செய்திகள் 8 இலட்சத்தை தாண்டியது “கொரோனா” நோயாளர் எண்ணிக்கை!

8 இலட்சத்தை தாண்டியது “கொரோனா” நோயாளர் எண்ணிக்கை!

292
0

உலகளவில் இதுவரை பதிவான தகவல்களின் அடிப்படையில் 801,117 பேர் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 38,771 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் இதுவரை 164,359 பேர் COVID-19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதன் மூலம் உலகளவில் பாதிக்கப்பட்ட மக்களில் அண்ணளவாக நான்கில் ஒரு பகுதியினர் அமெரிக்காவில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் சுமார் 22,000 பேர் பாதிக்கப்பட்டதற்கே கிட்டத்தட்ட 1500 பேர் வரை இறந்துள்ள நிலையில், அமெரிக்காவில் 164,359 பேர் பாதிக்கப்பட்டும் 3,173 பேர் வரையிலேயே மரணமடைந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதந் மூலம் பிரித்தானியா மக்களை பாதுகாக்க தவறியுள்ளமையோடு, தயார் நிலையில் இருந்திருக்க இல்லை என்பதும், இன்னமும் சரியான நடைமுறைகளை கடைப்பிடிக்காது, விமானப் பயணங்களை அனுமதிப்பதும், வெளியில் நடமாட அனுமதித்திருப்பதும் பலரின் கணடனத்திற்கும் உள்ளாகியுள்ளது.