Home செய்திகள் தனிமை படுத்தல் முகாமிலிருந்து 138 பேர் வீடுகளுக்கு திரும்பினர்:

தனிமை படுத்தல் முகாமிலிருந்து 138 பேர் வீடுகளுக்கு திரும்பினர்:

115
0

இலங்கையின் அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் முகாம்களிலி இருந்து 138 பேர் அவர்களது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தியத்தலாவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 79 பேரும், புனானை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 59 பேருமே இவ்வாறு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இத்தாலி, பிரான்ஸ் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இரு வாரங்களுக்கு முன் இலங்கை வந்திருந்த கொழும்பு, மாத்தறை, பதுளை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப் படுத்தல் கால எல்லை நிறைவடைந்ததும் அவர்களது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.