Home செய்திகள் 8 தமிழர்களை கொன்ற கொலையாளியின் விடுதலையை நியாயப்படுத்த மேலும் சில கைதிகள் விடுதலை!

8 தமிழர்களை கொன்ற கொலையாளியின் விடுதலையை நியாயப்படுத்த மேலும் சில கைதிகள் விடுதலை!

115
0

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக யாழ்பாணம் சிறைச்சாலையில் இருந்தும் கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று நோயை காரணம் காட்டி 8 தமிழர்களை கொன்ற கொலையாளிக்கு நீதிமன்றத்தின் கடும் தண்டனையையும் மீறி அண்மையில் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி விடுதலை வழங்கப்பட்டிருந்தது.

இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், தமிழர்கள் பிரதேசத்திலும் உள்ள சிறைக்கைதிகளில் சில தமிழர்களை விடுவித்து திசை திருப்பவும், நியாயப்படுத்தவ்உம் முனைகிறது சிறீலங்கா அரசாங்கம்.

அதந் ஒரு அங்கமாகவே, யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறு குற்றங்கள் புரிந்த நீதிமன்றங்களால் பிணை வழங்கப்பட்டு அதனை பூர்த்தி செய்ய முடியாது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் என 110 பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட 110 கைதிகளும் சொந்தப் (சுய) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது தங்களுக்குத் தாங்களே பிணையில் கையப்பமிட்டு நீதிபதிகளின் அறிவுறுத்தலின் படி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட அனைவரும் அவர்களின் வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள மேலும் பல கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.