
29-03-2020 இன்று பிரித்தானிய நேரம் மதியம் 12 மணிவரை எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் படி அனைத்து நாடுகளிலுமாக 31, 744 பேர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளதுடன், 6,77,938 பேர் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது சிறு குழந்தை முதல் இளவயதினர், முதியவர் என அனைவரும் இந்த நோயினால் இறந்துகொண்டிருப்பதுடன், நாளுக்கு நாள் பல மடங்கு இறப்பு வீதம் அதிகரித்துக் கொண்டே எல்வது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த நோய் ஆரம்பித்த சீனாவில் பாதிக்கப்பட்ட மாக்கள்ர் கடந்த வாரம் வரை அதிகமாக இருந்தனர். ஆனால் தற்போது சீனாவை விட சுமார் 50,000 நோயாளர்களால் அதிகரித்து அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.
தற்போதை தகவல்களில் அடிப்படையில், முதலாவதாக 1,23,781 பேர் அமெரிக்காவிலும், இரணடாவதாக 92,472 பேர் இத்தாலியிலும், 81.439 பேர் சீனாவிலும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு அடுத்தடுத்த இடங்களில், ஸ்பெயின், ஜேர்மனி, ஈரான், பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் இருக்கின்றன.
29-03-2020 இன்று காலை பிரித்தானிய நேரம் மதியம் 12:00 மணிவரையான தகவலின் அடிப்படையில்……
- ஐக்கிய அமெரிக்கா – 2,229 பேர் பலி, 1,23,781 பேர் பாதிப்பு
- இத்தாலி – 10,023 பேர் பலி, 92,472 பேர் பாதிப்பு
- ஜேர்மனி – 455 பேர் பலி, 58,247 பேர் பாதிப்பு
- பிரான்ஸ் – 2,314 பேர் பலி, 37,575 பேர் பாதிப்பு
- பிரித்தானியா – 1,019 பேர் பலி, 17,089 பேர் பாதிப்பு
- சுவிட்ஸர்லாந்து 282 பேர் பலி, 14,352 பேர் பாதிப்பு
- பெல்ஜியம் – 431 பேர் பலி, 10,836 பேர் பாதிப்பு
- நெதர்லாந்து – 639 பேர் பலி, 9,762 பேர் பாதிப்பு
- நோர்வே – 23 பேர் பலி, 4,054 பேர் பாதிப்பு
- அவுஸ்திரேலியா – 16 பேர் பலி, 3,969 பேர் பாதிப்பு
- இலங்கை – ஒருவர் பலி, 115 பேர் பாதிப்பு
- இந்தியா – 25 பேர் பலி, 987 பேர் பாதிப்பு
- சிங்கப்பூர் – 3 பேர் பலி 802 பேர் பாதிப்பு
- மலேசியா – 34 பேர் பலி, 2,470 பேர் பாதிப்பு
- கனடா – 36 பேர் பலி, 3,409 பேர் பாதிப்பு
- டென்மார்க் – 65 பேர் பலி, 2,201 பேர் பாதிப்பு
- நியூசிலாந்து – ஒருவர் பலி, 514 பேர் பாதிப்பு