Home உலக செய்திகள் லண்டனில் தமிழர் ஒருவர் கொரோனா நோயினால் மரணம்!

லண்டனில் தமிழர் ஒருவர் கொரோனா நோயினால் மரணம்!

484
0

பிரித்தானியா தலைநகர் லண்டனில் தமிழர் ஒருவர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளார்.

லண்டன் குறைடன் பகுதியில் வசித்து வந்த 46 வயதுடைய சுந்தரலிங்கம் மெய்யழகன் (மெய்க்குட்டி) என்பவரே இன்று காலை 9:00 மணியளவில் மரணமடைந்துள்ளார்.

தாயகத்தில், யாழ் மாவட்டம் – வடமராட்சி பிரதேசத்தின் ஆதிகோயிலடியைச் சேர்ந்த குறித்த நபர் திருமணமானவர் எனவும், இங்கு வாடகை கார் ஓட்டுனர் (Private Hire Taxi Driver) ஆக இருந்தவர் எனவும் அறியவந்துள்ளது.

இவர் ஒரு வாரத்தின் முன் கடுமையான காச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்திய சாலை கொண்டு செல்லப்பட்டு அங்கு கொரோனா நோயிற்கான அறிகுறியான அதிக உடல் வெப்பநிலை (காச்சல்) இருந்தமையால் வைத்தியசால்லையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று அவர் உயிர் பிரிந்துள்ளது.