Home உலக செய்திகள் பிரித்தானியாவில், 48 மணித்தியாலங்களில் 469 பேர் பலி!

பிரித்தானியாவில், 48 மணித்தியாலங்களில் 469 பேர் பலி!

213
0

பிரித்தானியாவில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்து கடந்த 48 மணித்தியாலங்களில் மட்டும் 469 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 29-03-2020 வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தகவலின் படி 19,522 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி உள்ளதோடு, 1,228 பேர் இதுவரை பலியாகியிருக்கின்றனர்.

இன்றைய தினம் பலியானவர்களில் ஒரு ஈழத் தமிழரும் உள்ளடங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு (until End of June) பிரித்தானியாவில் அவசரகால நிலமை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, குறைந்தது 20,000 பேர் இந்த நோயினால் பிரித்தானியாவில் உயிரிழக்க நேறிடம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உலகளாவியரீதியில் உயிரிழந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 32,144 ஆக உயர்வடைந்துள்ளதோடு, 6,83,683 பேர் பதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.