Home தாயக செய்திகள் இலங்கையில் “கொரோனா” நோயாளர் எண்ணிக்கை 115! மேலும் 10 நாட்களுக்கு விமான பயணங்களுக்குத் தடை!

இலங்கையில் “கொரோனா” நோயாளர் எண்ணிக்கை 115! மேலும் 10 நாட்களுக்கு விமான பயணங்களுக்குத் தடை!

88
0

இலங்கையில் இதுவரை 115 “கொரோனா” நோயாளர்கள் இனம்காணப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் முதலாவது “கொரோனா” நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து நாட்டில் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இனி வேறு மாவட்டங்களில் “கொரோனா” நோயாளிகள் இனம் காணப்பட்டால் அவர்களை அந்தந்த மாவட்ட வைத்தியசாலைகளிலேயே வைத்து சிகிச்சை வழங்கவேண்டும் எனவும் சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், அதற்கு தேவையான வசதிகள் பூரணமாக செய்து கொடுக்கப்படவில்லை என வடமாகாண வைத்தியசாலைகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் யாழ் போதனா வைத்தியசாலைக்கே சில கருவிகளும், உபகரணங்களும் வந்துள்ளது.

இதற்கு முதல் சவர்காரத்தில் கை களுவுவது, பாதுகாப்பற்ற “மாஸ்க்”, என அதனோடே பயத்துடன் வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்கள் பணியாற்றியிருந்தனர்.

இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முகமாக இலங்கைக்குள் உள்நுழையும் பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணடத் தடை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.