Home உலக செய்திகள் பிரான்ஸில் 7 தமிழர்கள் பலி – இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1696 ஆக உயர்ந்தது!

பிரான்ஸில் 7 தமிழர்கள் பலி – இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1696 ஆக உயர்ந்தது!

219
0

பிரான்சில் – யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

யாழ் – தாவடி பிரதேசத்தை சேர்ந்த குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) என்பவரே நேற்றைய தினம் (26/03) உயிரிழந்தவர் ஆவார்.

அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு சென்று திரும்பிய இந்த இளைஞன், 14 நாட்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்துள்ளார். பின்னர் நோய் அதிகரித்த நிலையில் 8 தினங்கள் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்துள்ளார்.

இறக்கும் தருவாயில் இறுதியாக மனைவியை மட்டும் பார்க்க மருத்துவர்கள் அனுமதித்தனர்.

குறித்த இளைஞனுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதோடு, மனைவியும் மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று நோயால் இன்று காலை 8:00 மணிவரையான தகவலின் படி இதுவரை 1696 பேர் இறந்துள்ளதோடு, 29,155 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரான்ஸில் இந்த நோயினால் இதுவரை 7 (ஏழு) தமிழர்கள் இறந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.