Home செய்திகள் எண்மரை படுகொலை செய்தவரை நீதிமன்ற தீர்ப்பையும் மீறி விடுவித்த இலங்கையின் செயற்பாடு கவலைக்கும், கண்டனத்திற்கும் உரியது!

எண்மரை படுகொலை செய்தவரை நீதிமன்ற தீர்ப்பையும் மீறி விடுவித்த இலங்கையின் செயற்பாடு கவலைக்கும், கண்டனத்திற்கும் உரியது!

126
0

மிருசுவில் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் பல வருடங்களிற்கு பின்னர், 2015 இல் நீதியை அனுபவித்துள்ளனர், ஆனால், அப் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சார்ஜன்ட் ரத்நாயக்காவை விடுதலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தன்னிச்சையான தீர்மானம் மிகவும் கவலை அளிக்கும் செய்தியை தந்துள்ளது. ஜனாதிபதியின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் நீதி தலைகீழாக மாற்றப்பட்டுள்ளமை வெறுக்கத்தக்கது. என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் தெரிவித்ததாவது;

“பயங்கரமான குற்றங்களை இழைத்த படைவீரர்கள், நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டாலும் மன்னிப்பளித்து விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கவலை தரும் செய்தியை இந்த விடுதலை தெளிவாக தெரிவித்துள்ளது.

பாரிய நோய் தொற்று அபாயத்தை பயன்படுத்தி பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வேளையில் வழங்கிய இந்த விடயத்துடன் தொடர்புடைய ஏனைய வாக்குறுதிகள் குறித்தும் சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதிக்கான உரிமைகள் உள்ளன,நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யவேண்டிய கடப்பாடு இலங்கைக்குள்ளது எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.