Home உலக செய்திகள் சிறு குழந்தை முதல் முதியோர் வரை உயிர் பறிக்கும் கொரோனா – உலகளவில் 22 ஆயிரத்தை...

சிறு குழந்தை முதல் முதியோர் வரை உயிர் பறிக்கும் கொரோனா – உலகளவில் 22 ஆயிரத்தை தாண்டிய மரணங்கள்!

108
0

உலகையே உறங்கு நிலைக்குள் கொண்டுவந்துள்ள கொரோனா நோய்த் தொற்று நாளாந்தம் அதிவேகத்துடன் பரவி இதுவரை உலகெங்கும் 22 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை பலிகொண்டுள்ளது.

26-03-2020 இன்று பிரித்தானிய நேரம் மதியம் 12 மணிவரை எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் படி அனைத்து நாடுகளிலுமாக 22, 026 பேர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளதுடன், 4,87,434 பேர் நோய் தொற்றுக்கு உள்லானவர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

வயதானவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையுமே இது தாக்குவதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட போதும் தற்போது சிறு குழந்தை முதல் இளவயதினர், முதியவர் என அனைவரும் இந்த நோயினால் இறந்துகொண்டிருப்பது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

26-03-2020 இன்று காலை பிரித்தானிய நேரம் மதியம் 12:00 மணிவரையான தகவலின் அடிப்படையில்……

  • இலங்கை – 102 பேர் பாதிப்பு
  • இந்தியா – 14 பேர் பலி, 695 பேர் பாதிப்பு
  • சிங்கப்பூர் – 2 பேர் பலி 631 பேர் பாதிப்பு
  • ஜேர்மனி – 68 பேர் பலி, 39,502 பேர் பாதிப்பு
  • பிரித்தானியா – 465 பேர் பலி, 9,529 பேர் பாதிப்பு
  • பிரான்ஸ் – 1,331 பேர் பலி, 25,233 பேர் பாதிப்பு
  • சுவிட்ஸர்லாந்து 165 பேர் பலி, 11,435 பேர் பாதிப்பு
  • இத்தாலி – 7,503 பேர் பலி, 74,386 பேர் பாதிப்பு
  • பெல்ஜியம் – 220 பேர் பலி, 6,235 பேர் பாதிப்பு
  • அவுஸ்திரேலியா – 13 பேர் பலி, 2,799 பேர் பாதிப்பு
  • கனடா – 36 பேர் பலி, 3,409 பேர் பாதிப்பு
  • நோர்வே – 14 பேர் பலி, 3,212 பேர் பாதிப்பு
  • டென்மார்க் – 34 பேர் பலி, 1,851 பேர் பாதிப்பு
  • நெதர்லாந்து – 356 பேர் பலி, 6,412 பேர் பாதிப்பு
  • மலேசியா – 23 பேர் பலி, 2,031 பேர் பாதிப்பு
  • நியூசிலாந்து – 283 பேர் பாதிப்பு
  • ஐக்கிய அமெரிக்கா – 1,036 பேர் பலி, 68,594 பேர் பாதிப்பு