
பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் Covid-19 வைரஸ் தொற்றிற்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் Clarence House வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இளவரசர் சாள்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். எனினும் அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
அரசு மற்றும் மருத்துவ ஆலோசனைகளின் படி இளவரசர் சாள்ஸ் இப்போது ஸ்கொட்லாத்தில் உள்ள வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளார்.
அண்மைய காலப் பகுதியில் அவர் பொது நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது கண்டறியபடவில்லை. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.