Home செய்திகள் யாழ் மாவட்டத்தின் முக்கிய பெரும் சந்தைகளுக்கு பூட்டு – திறந்த வெளிகளில் வியாபாரம் செய்யுமாறு பணிப்பு!

யாழ் மாவட்டத்தின் முக்கிய பெரும் சந்தைகளுக்கு பூட்டு – திறந்த வெளிகளில் வியாபாரம் செய்யுமாறு பணிப்பு!

105
0

யாழ் மாவட்டத்தின் முக்கிய சந்தைகள் அனைத்தியும் பூட்டி வைக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ள மகேசன் அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோத் தொற்று தொடர்பான அசாதாரண சூழலும், அவசிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இன்று (25/03) யாழ் மாவட்ட செயலகத்தில் அவர் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..

யாழ் மாவட்டத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொண்டுவருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதனை யாழ் மாவட்ட வணிகர் கழகம் முன்னெடுத்து வருகின்றது.

இங்கு ஊறடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது பொதுச் சந்தைகளில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது பாரிய சவாலாக உள்ளது

இதற்கு தீர்வு காணும் முகமாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளருடன் கலந்துரையாடி சில முடிவுகளை எடுத்துள்ளோம்.

அதற்கமைய மறு அறிவித்தல் வரை யாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகளை பூட்டி வைப்பது என்றும், அதற்கு பதிலாக மைதானங்கள் மற்றும் திறந்த வெளிகளில் வியாபாரங்களை நடாத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் ஊறடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது வீடுகளில் இருந்தவாறே மக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். இதை கூட்டுறவுத் திணைக்களமும், வணிகர் கழகமும் இணைந்து செய்யவுள்ளன.

இதந் மூலம் மக்கள் தேவையற்று வெளியில் திரிவதும், வர்த்தக நிலையங்கள், சந்தைகளில் மக்கள் கூட்டமாக இருப்பதும் தவிக்கப்படும் என நம்புகிறோம்.

அத்தோடு கடற் தொழிலாளர்கள் கடல் தொழில் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.