Home தாயக செய்திகள் Corona எச்சரிக்கை வலயங்களாக 3 மாவட்டங்கள் பிரகடனம்!

Corona எச்சரிக்கை வலயங்களாக 3 மாவட்டங்கள் பிரகடனம்!

130
0

இலங்கையில் Covid-19 வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகி Corona நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இலங்கையின் 3 மாவட்டங்களை Corona எச்சரிக்கை வலயங்களாக இலங்கை அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.

இதற்கமைய கொழும்பு, ஹம்பகா, களுத்துறை ஆகிய 3 மாவட்டங்களும் Corona எச்சரிக்கை வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் காலவரையறை இன்றிய ஊரடங்கு சட்டமும் அமுலில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதே வேளை குறித்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கான உணவுப் பொதிகளை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசேட ஊடக அறிக்கை ஒன்று 24-03-2020 இன்று காலை அரசாங்கம் வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இது வரை இலங்கையில் மொத்தமாக 97 பேர் Corona நோய்த் தாக்கத்திற்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின அதேவேளை, 227 பேர் நோய் தோற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.