
இலங்கையில் COVID-19 வைரஸ் தோற்றிற்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 86 ஆக உயவடைந்துள்ளதுடன், 222 பேர் நோய்த் தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய நாடான இலங்கையில் இப் புதிய வகை நோயான “கொரோனா நோய்” தீவிரமடைந்தால் அதனை எதிர்கொண்டு மக்களை காப்பாற்றும் போதிய வைத்திய வசதிகள் இலங்கையில் இல்லாத காரணத்தினால் மக்களுக்கு பல எச்சரிக்கைகளை அரசாங்கம் விடுத்த்துள்ளதுடன், ஊரடங்குச் சட்டம் போடப்பட்டு மக்கள் நடமாட்டங்கள், ஒன்று கூடல்களை தடுத்தும் வருகின்றது.
அத்துடன் யாழ் மாவட்டத்தில் கொரோனா நோயாளி ஒருவர் உறுதி செய்யப்பட்டதை அடுத்து வட மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. யாரும் உட் செல்லவோ, அல்லது வெளீயேறவோ அனுமதி இல்லை. அதி விசேட தேவை எனின் அதற்கான காவல்துறையினரின் தற்காலிக அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டும் பரிசோதனைகளின் பின்னர் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக புதிய இராணுவ சோதனைச் சாவடிகள் வவுனியாவிற்கும், புளியங்குளம் பகுதிக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வேளை இன்றைய தினம் (23-03-2020) மேலும் புதிய 10 அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கியுள்ள அரசாங்கம் அவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும், தவறூவோர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
அந்த 10 அறிவுறுத்தல்கள்உம் பின்வருமாறு:
* தேவை ஏற்படுமாயின் மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்துங்கள்.
* முடியுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் இரண்டு நபர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளி தூரத்தை பேணுங்கள்.
* அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக உங்கள் வீட்டிலிருந்து மிக அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு மாத்திரம் செல்லுங்கள்.
*ஒரு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வர்த்தக நிலையத்திற்கு செல்லுங்கள்.
* வழங்கப்பட்டுள்ள வைத்திய ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
* வயோதிபர்களை வீட்டிலேயே தங்க வைக்கவும்.
*பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களில் செலவிடும் நேரத்தில் நபர்களுக்கு இடையில் 1மீற்றர் இடைவெளி தூரத்தை பேணுங்கள்.
* பொருட்களை கொள்வனவு செய்யும் பொழுது வர்த்தக நிலையங்களில் செலவிடும் காலத்தை மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
* வர்த்தக நிலையங்களுக்குள் அதிகமானோர் உட்பிரவேசிப்தை கட்டுப்படுத்துவதில் வர்த்தக நிலைய உரிமையாளர், முகாமையாளர், பாதுகாப்பு பிரிவினர் கவனம் செலுத்த வேண்டும்.
* வெளியிடங்களுக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வரும் பொழுது வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனைகள் கடைபிடித்த பின்னரே வீடுகளுக்குள் பிரவேசியுங்கள்.