Home செய்திகள் வடமாகாணத்தின் முதலாவது “கொரோனா” நோயாளி சிகிச்சைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைப்பு!

வடமாகாணத்தின் முதலாவது “கொரோனா” நோயாளி சிகிச்சைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைப்பு!

116
0

யாழ் மாவட்டத்தில் COVID-19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இனம் காணப்பட்டு உறுதி செய்யப்பட்ட வடமாகாணத்தின் முதலாவது “கொரோனா” நோயாளி சிகிச்சைக்காக கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இத்தகவலை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலானிதி சத்தியமூர்த்தி உறுதி செய்தார்.

நோய்த் தொற்றிற்குள்ளான குறித்த நபர் யாழ், கண்டிவீதியில் அரியாலைப் பகுதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் போதகருடன் உரையாடியவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த போதகரின் சிறப்பு வளிபாட்டின் பின்னர் அப் போதகரை தனையாக அறை ஒன்றில் சந்தித்து சுமார் அரை மணி நேரம் வரை உரையாடிய நபருக்கே இந்த நோத் தொற்று ஏற்பட்டுள்ளதையும் அவர் உறுதிசெய்துள்ளார்.

வடமாகாணத்தில் இதுவரை இல்லாத குறித்த நோய் விமானம் மூலம் பயணம் மேற்கொண்டு பல பகுதிகளையும், பல மக்களையும் கடந்து வந்த போதகரிடம் இருந்தே இந்த நோய் தொற்று குறித்த நபருக்கு தொற்றியிருக்க்உம் என நம்பப்படுகிறது.

மருத்துவக் குறிப்புகளின் படி COVID-19 வைரஸ் ஒருவர் மீது தொற்றிக் கொண்டாலும் அது 14 நாட்களுக்கு பின்னரே தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்படுகிறது. அத்தோடு குறித்த வைரஸ் ஒருவர் மீது தொற்றிக் கொண்டாலும் அவரது உடல் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்குமாயின் அதிலிருந்து மூச்சுக் காற்று, தும்மல், இருமம், தொடுகை மூலம் இன்னுமோர் நபரின் உடலில் தொற்றிக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே குறித்த நோய் அந்த போதகருக்கு இல்லை என்றாலும் அந்த போதகர் மூலமே குறித்த நபருக்கு “கொரோனா” நோய் ஏர்பட்டுள்ளமை புலனாகிறது.

இதேவேளை, குறித்த நோயாளியை சிகிச்சைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதன் மூலம் வடமாகாணத்தின் மிகப்பெரும் வைத்தியசாலையான யாழ் போதனா வைத்தியசாலையில் “கொரோனா” நோயாளர்களை பராமரிக்கவோ, சிகிச்சை அளிக்கவோ போதுமான வசதிகள் இல்லை என்ற DR.Sivamohan இன் கருத்தும் உண்மையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்தி: http://www.thamilnaatham.media/2020/03/22/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-covid-19-%E0%AE%B5%E0%AF%88/