Home செய்திகள் கொடிகாமத்தில் “கொரோனா” நோயாளர் தனிமைப்படுத்தல் முகாம்!

கொடிகாமத்தில் “கொரோனா” நோயாளர் தனிமைப்படுத்தல் முகாம்!

110
0

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு உரிய கோரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் பிரதேசத்தில் 500 பேரை தங்கவைக்கக் கூடிய வகையில் 522வது பிரிகெட் படை முகாமில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த “கொரோனா” தனிமைப்படுத்தல் முகாமுக்கு இன்று (22-03-2020) நண்பகல் 6 பேருந்துகளில் 233 பேர் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருகை தந்தவர்கள் எனவும், அவர்களுக்குரிய உணவு மற்றும் மருந்து வழங்கள் உள்ளிட்டவற்றை இராணுவ சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் என்பன இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் கோரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தியிருந்ததற்கு அமைவாகவே யாழ் மாவட்டத்திற்கான முகாம் குறித்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.