Home செய்திகள் இலங்கையில் COVID-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

இலங்கையில் COVID-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

110
0

உலகளாவிய ரீதியில் இதுவரை 277,324 மனித உயிர்களை பலி எடுத்துள்ள COVID-19 வைரஸ் தாக்கத்திற்கு இலங்கையிலும் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந் நோயால் இலங்கையில் இதுவரை எவரும் இறக்கவில்லை எனினும் உலகளாவிய ரீதியில் 11,544 பேர் இதுவரை இந்த வைரஸ்தாக்கத்தினால் ஏற்படும் “கொரோனா” நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இந்த நோய் பரவாமலும், உயிரிழப்புக்களை குறைக்கவும் இலங்கை அரசு மேற்கொண்டுவரும் பல நகர்வுகளில் ஒன்றாக நேற்று முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் ஊறடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், வைத்திய சாலைகளில் இதுவரை வைத்தியர்களுக்கு கூட முக கவசம், கை உறை போன்றன இல்லாமல் இருப்பதை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலை அதற்கு தயாரான நிலையில் காணப்பட்டாலும், யாழ் மாவட்டத்தில் உள்ள ஏனைய வைத்திய சாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் முக கவசமோ, கை உறையோ இல்லாமலே சேவையாற்றி வருகின்றனர்.

வைத்திய சாலைக்கு செல்லும் நோயாளர்களுக்கு கை கழுவ அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் அனைவரும் கை கழுவ ஒரு சவற்காரம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. இது சிறந்த முறை அல்ல.

ஏனெனில் அங்கு வரும் நோயாளர் ஒருவர் இந்த “COVID-19” தாக்கத்திற்கு உள்ளானவராக இருந்தால் அவர் பாவித்த சவற்காரத்தை இன்னுமொருவர் பாவிக்கும் போது அவருக்கு தொற்றும் என்பதோடு அவ்வாறே பலருக்கும் பரவ வாய்ப்புக்கள் உள்ளன.

இதனை கருத்தில் கொண்டு சுகாதார திணைக்களம் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் போதிய முக கவசம், கை உறை, மற்றும் உகந்த பொருட்களை வழங்கி மக்களையும், மக்களுக்கு சேவையாற்றும் வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களையும் பாதுகாத்தல் அவசியம்.