Home உலக செய்திகள் பிரித்தானியாவில் COVID-19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்தது!

பிரித்தானியாவில் COVID-19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்தது!

96
0

பிரித்தானியாவில் COVID-19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 144 ஆக உயர்வடைந்துள்ளது.

இதே வேளை, 3,269 பேர் இதுவரை இந் நோய் தோற்றிற்கு உள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டு அவர்களுக்க்கான சிகிச்சைகள் தனிமைப்படுத்தப்பட்ட முறையில் இடம்பெற்றுவருவதாக நேற்று 19/03 வியாழக்கிழமை மாலை பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை (NHS) அறிவித்துள்ளது.

இதே வேளை நாட்டில் அதிகளவான இராணுவத்தினர் நடமாட்டம் காணப்படுவதால் நாளை (21/03) சனிக்கிழமை முதல் மக்கள் வெளியே செல்லமுடியஅத வகையில் முற்றாக முடக்கப்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், அவ்வாறான நடவடிக்கு தற்போதைக்கு இல்லை என்றே தெரியவருகிறது. சில வேளை களில் அடுத்த வார ஆரம்பிலோ, அல்லது இறுதியிலோ மத்திய லண்டன் பகுதி மட்டும் மக்கள் நடமாட்டத்திற்கு தடைப்படுத்தப்படலாம் என்றும் அதை அடுத்தே தேவை ஏற்படின் ஏனைய இடங்களும் படிப்படியாக முடக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளை, அவ்வாறான நிலை ஏற்படுமாயின் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் தேவையை கருத்தில் கொண்டு உணவு, மற்றும் மருந்து வகை பொதி சேவைகள் செய்வோர் மட்டும் அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.