Home முக்கிய செய்திகள் லண்டனில் மூடப்பட்டது 40 நிலக்கீழ் தொடரூந்து நிலையங்கள்!

லண்டனில் மூடப்பட்டது 40 நிலக்கீழ் தொடரூந்து நிலையங்கள்!

237
0

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் எந்த வேளையும் சன நெரிசலோடு பயனிக்கும் நிலக்கீழ் தொடரூந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா நோ தொற்று ஏனைய பகுதிகளைவிட லண்டனில் பல மடங்கு அதிவேகமாக பரவிவரும் நிலையிலேயே மத்திய லண்டன் பகுதியில் உள்ள 40 நிலக்கீழ் தொடரூந்து நிலையங்களை இன்று (19/03) காலை முதல் காலவரை இன்றி மூடுவதாக லண்டன் போக்குவரத்து திணைக்களம் (TFL) அறிவித்த்துள்ளது.

அத்தோடு வழமையான சேவைகள் இன்றி மிக மட்டுப்படுத்தப்பட்ட சேவையே தற்போது உள்ளதாகவும், பயணிகளை அதற்கேற்ப தங்கள் பயணங்களை ஒழுங்கு செய்யுமாறும் அறிவித்துள்ளது.

நேற்று மாலை அவசரகால அறிவிப்பாக பாடசாலைகள் காலவரையின்று மூடப்படுவகவும், மேலும் பல இறுக்கமான முடிவுகள் அடுத்தடுத்த நாட்களில் வெளிவரும் எனவும் பிரித்தானிய பிரதமர் அறிவித்ததின் பின்னர் லண்டனில் சில இடங்களில் வன்முறைகள் ஆரம்பித்துள்ளதோடு, அதிகளவில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.