Home செய்திகள் இலங்கையில் ஒரு வார அரசு விடுமுறை!

இலங்கையில் ஒரு வார அரசு விடுமுறை!

73
0

சீனாவில் ஆரம்பித்து இன்று உலகின் 165 நாடுகளுக்கு பரவியுள்ள உயிர் கொல்லி நோயான “கொரோனா தொற்று நோயில்” இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு நாளை 20/03 வெள்ளிக்கிழம்ஐ முதல் ஒரு வாரத்திற்கு அரச, மற்றும் தனியார் துறையினருக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதே வேளை, வீடுகளில் இருந்து அலுவலக பணிகளை செய்து உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதே வேளை, இன்று மாலை சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளமையால் மேலதிக பல அவசரகால அறிவிப்புக்கள் விடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.