Home உலக செய்திகள் பிரித்தானியாவில், கொரோனா நோயாளர் எண்ணிக்கை 1950 ஆக உயர்ந்தது!

பிரித்தானியாவில், கொரோனா நோயாளர் எண்ணிக்கை 1950 ஆக உயர்ந்தது!

83
0

ஐக்கிய இராட்சியத்தில் (UK) கொரோனா நோயாளர் எண்ணிக்கை 1950 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், இவ் எண்ணிக்கையின் சுமார் நான்கில் மூன்று (3/4) பகுதியான 1557 பேர் இங்கிலாந்தில் உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த நோயினால் 71 பேர் பிரித்தானியாவில் மரணமடைந்துள்ளமை தற்போது வரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வாரமாக கோரோனா நோயாளர் எண்ண்ணிக்கை பிரித்தானியாவில் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1500 க்கும் அதிகமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை நாட்டை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தவிர பிரித்தானியாவில் இருந்து பல ஏனைய நாட்டு மக்கள் அச்சத்தால் வெளியேறி வரும் நிலையில், பிரித்தானியாவின் மத்திய லண்டன் பகுதியில் தங்கியிருன்து படித்து வந்த சீன மாணவர்கள் பலர் சீனாவிற்கு திரும்பி சென்றுவரும் நிலையில், அவ்வாறு சென்ற சீன மாணவர்கள் நால்வருக்கு (4) COVID-19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது.