Home முக்கிய செய்திகள் கடன்களை மீளப் பெற 6 மாத காலதிற்குத் தடை – கோட்டாபாயவின் அதிரடி அறிவிப்பு!

கடன்களை மீளப் பெற 6 மாத காலதிற்குத் தடை – கோட்டாபாயவின் அதிரடி அறிவிப்பு!

84
0

நாட்டில் ஏற்கனவே வழங்கப்பட்ட கடன்களை மீளப் பெற 6 மாத காலத்திற்கு தான் தடை விதித்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோத் தொற்று காரணமாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு உட்பட்டு பாடசாலைகள் மூடப்பட்டும், பல நிறுவனங்கள் பாரிய நட்டங்களை எதிர்கொண்டுள்ள சூழலிலும், வருமானங்கள் இன்றி சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களை கருத்தில் கொண்டும், ஜனாதிபதியினால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய நனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ …

நாட்டில் அனைவருக்கும் அரிசி கிடைக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு கிலோ பருப்பு 65 ரூபாவிற்கும், ஒரு மீன் ரின் 100 ரூபாவிற்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

அத்தோடு மக்களுன் சுமையை குறைத்து, மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் மக்களுக்கு நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்டிருந்த கடன் தொகையை மீளப் பெற 6 மாத காலத்திற்கு நிதி நிறுவனங்களுக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவிட்டுள்ளார்.

இச் செயற்பாடு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.