Home செய்திகள் இன்று – வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பிரதான தமிழ் கட்சிகள்!

இன்று – வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பிரதான தமிழ் கட்சிகள்!

70
0

யாழ் மாவட்டத்தில் பிரதான தமிழ் கட்சிகள் இன்று தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இன்று தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதற்கமைய இம் முறை தேர்தலில் அந்தந்தக் கட்சிகள் சார்ந்து யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவோர் பெயர்கள் உறுதியாகியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்,

மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், இ.ஆர்னோல்ட், சி.சிறீதரன், ஈ.சரவணபவ்அன், வே.தவேந்திரன், ர.சசிகலா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தமித் தேசிய மக்கள் முன்னணி சார்பில்,

பொ.கஜேந்திரகுமார், செ.கஜேந்திரன், வி.மணிவண்ணன், ந.காண்டீபன், சு.வாசுகி, செ.பத்மநாதன், ஞானகுகனேஸ்வரி, ஜெயக்குமார், க.சுகாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதே போல் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில்,

க.வி.விக்னேஸ்வரன், எம்.கே.சிவாஜிலிங்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.சிறீகாந்தா, மீரா அருளானந்தம், க.அருந்தவபாலன், க.இரத்தினகுமார், த.சிற்பரன், சி.சிவகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதேவேளை மைத்திரிபால சிறீசேனவின் செல்லப்பிள்ளையான அங்கஜன் இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுவது இங்கு குறிப்பிடத்தக்கது.